நாட்டில் உணவுப் பொருட்களின் விலைக்குறைப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்!

சில உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகம் மற்றும் மதுபான சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், பிரைட் ரைஸ், கொத்து மற்றும் பிரியாணி உள்ளிட்ட முக்கிய உணவுகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த உணவுப் பொருட்களின் விலை ஒவ்வொன்றுக்கும் ரூ.25  குறைக்கப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை உணவகம் மற்றும் மதுபான சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனைத்து வகையான சிற்றுண்டி உணவுகளின் விலைகள் ரூ.10ஆல் குறைக்கப்படும் எனவும், இந்த விலைக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு நேர்மையாக வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு உணவக உரிமையாளர்களை கேட்டுக்கொள்வதாகவும், அகில இலங்கை உணவகம் மற்றும் மதுபான சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான் தெரிவித்துள்ளார்.