இலங்கை மாணவர்களுக்கு கூகுள் ஜெமினி இலவசம்!
கூகுள் தனது செயற்கை நுண்ணறிவு ஜெமினி (Gemini) அம்சங்களும், அதனுடன் தொடர்புடைய பல்வேறு சலுகைகளும் இலங்கை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான தகவலை, டிஜிட்டல் பொருளாதாரத்தின் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன வெளியிட்டுள்ளார்.
அதன்படி, இந்த வசதி வருகிற ஒக்டோபர் மாத நடுப்பகுதியிலிருந்து இலங்கை மாணவர்களுக்கு கிடைக்கத் தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் மற்றும் கூகுள் நிறுவனத்திற்கிடையிலான பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் சிறப்பான பலனாக அமைகின்றது என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், நவீன டிஜிட்டல் கருவிகள் மற்றும் கல்வி வளங்களை மாணவர்களுக்காக வழங்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Tags:
இலங்கை