நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்
அரச பல்கலைக்கழகங்களில் நாளை (30) ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களின் கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகளை தீர்க்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக தெரிவித்து, இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
இதுகுறித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான சாருதத்த இளங்கசிங்க (Charudaththe Ilangasinghe), இன்று (29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது ஒரு வருடத்தை கடந்திருந்தாலும், அரச பல்கலைக்கழகங்களில் நிலவும் நெருக்கடிகள் எதற்கும் இதுவரை தீர்வு காணப்படவில்லை.
தற்போது அரச கல்வி அமைப்பு கடுமையான வீழ்ச்சியுடன் நெருக்கடியை எதிர்நோக்கிய நிலையில் உள்ளது. குறிப்பாக, பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பற்றாக்குறை மிகவும் சீரழிந்துள்ள நிலையில் காணப்படுகிறது.
“பேராதனை பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 200 விரிவுரையாளர்கள் பணியிலிருந்து விலகியுள்ளனர்” எனச் செயலாளர் சாருதத்த இளங்கசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.