இலங்கையில் அதிர்ச்சியில் ஆழ்த்திய தங்கவிலை

இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்று (08) தங்கத்தின் விலை பவுண் ஒன்றிற்கு ரூ.4,000 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு, நகை பிரியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினரின் தெரிவிக்கையின்படி, கடந்த சனிக்கிழமை (06) ரூ.289,000 ஆக இருந்த 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, இன்று ரூ.293,000 ஆக உயர்ந்துள்ளது.

அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (08) தங்க விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை ரூ.293,000 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.271,000 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.  

அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.36,625 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.33,875 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.