யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற சொகுசு பேருந்து விபத்தில் சிக்கியது!

நீர்கொழும்பு கட்டுவ சந்தி அருகே, யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதால் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்கக்கலக்கமே இந்த விபத்துக்கான காரணமாகக் கூறப்படுகின்றது.

மதிலுடன் மோதி விபத்துக்குள்ளான அந்த தனியார் சொகுசு பேருந்தின் முன்பகுதி பெரிதும் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.