நாட்டில் தங்கவிலையில் வீழ்ச்சி!
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (25) 24 கரட் தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு ரூ.2,000-ஆல் குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட தகவலின்படி, தற்போதைய தங்க விலை நிலவரத்தின்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை ரூ.301,000 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.
இன்று (25) நிலவரப்படி, 22 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.278,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதனடிப்படையில், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.37,625 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.34,800 ஆகவும், விற்பனை செய்யப்படுகின்றது.
Tags:
இலங்கை