முச்சக்கரவண்டியின் விபத்தினால் 6 பாலர் பாடசாலை மாணர்கள் வைத்தியசாலையில்
நுவரெலியாவின் நோர்வூட் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில், 6 பாலர் பாடசாலை மாணர்கள் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்துள்ளனர். முச்சக்கரவண்டி அதிவேகத்தில் பயணித்த நிலையில், எதிர்திசையில் வந்த காருடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த விபத்தில், நுவரெலியாவின் நோர்வூட் பகுதியில் கல்வி பயிலும் 6 பாலர் பாடசாலை மாணவர்களும், அவர்களுடன் பயணித்த ஒரு பாலர் பாடசாலை ஆசிரியரும் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முச்சக்கரவண்டியின் முன்சக்கரத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பற்ற உதிரிப்பாகம், எதிர்திசையில் வந்த காருடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்திற்கு தொடர்புடையதாகக் கருதப்படும் காரை ஓட்டிச் சென்ற பெண், சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.