12 மாவட்டங்களுக்கு வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாட்டில் இன்றைய தினம் (13), 12 மாவட்டங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்துப் பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள சில பகுதிகள், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுடன், அதிக வெப்பத்தை உணரும் நிலைமை உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலை காரணமாக, பொதுமக்கள் கீழ்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது, வேலை செய்யும் இடங்களில் அதிகளவில் நீர் பருகுதல், வெளியே செல்லும் போது நிழலில் தங்குதல், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை வெப்பத்திலிருந்து பாதுகாப்பது, வாகனங்களில் குழந்தைகளை விட்டு செல்லாமல் இருக்க வேண்டும், வெளிப்புற செயற்பாடுகளை முடிந்தளவு தவிர்த்தல், வெளிர் நிற, சுழற்சி ஏற்படாத ஆடைகளை அணிதல் போன்ற நடவடிக்கைகள், வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் மிகவும் அவசியமானவை என திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.