இலங்கையில் 15 பேரை காவுவாங்கிய கோர விபத்து ; உயரும் பலி எண்ணிக்கை

எல்ல – வெல்லவாய வீதியின் 24வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில், நேற்று (04) இரவு பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளானது. பேருந்து சாலை விட்டு விலகி சுமார் 500 மீட்டர் தூரம் பள்ளத்தில் சென்றதால் விபத்து மிகவும் கொடூரமானதாக ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்களில் 9 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

மேலும், காயமடைந்தவர்களில் ஐந்து குழந்தைகள் உட்பட 11 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.