இலங்கையில் சடுதியாக தங்கவிலையில் ஏற்பட்ட அதிகரிப்பு!
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்றத்தும் இறக்கத்தும் காணப்பட்டுள்ள நிலையில், தற்போதைய சந்தை நிலவரத்தின்படி தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இன்றைய தினமான (25.08.2025) நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ.1,017,696 ஆக பதிவாகியுள்ளது. அத்துடன், 24 கரட் தங்கம் ஒரு கிராம் ரூ.35,900 எனவும், தற்போது சந்தையில் விற்கப்படுகின்றது.
அதேவேளை, தற்போதைய (25.08.2025) சந்தை நிலவரத்தின் அடிப்படையில், 24 கரட் தங்கப் பவுண் ரூ. 287,200 ஆகவும், 22 கரட் தங்கம் 1 கிராம் ரூ. 32,910 ஆகவும், 22 கரட் தங்கப் பவுண் (8 கிராம்) ரூ. 263,300 ஆகவும் பதிவாகியுள்ளதுடன் 21 கரட் தங்கம் 1 கிராம் ரூ. 31,420 ஆகவும், 21 கரட் தங்கப் பவுண் (8 கிராம்) ரூ. 251,300 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.