நாட்டில் பலத்த மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள், அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (06) வெளியிடப்பட்டுள்ள தினசரி வானிலை அறிக்கையிலேயே இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும்  

பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக  

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய சேதங்களை தவிர்க்க,  

போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.