அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

நவீன மற்றும் திறமையான அரச சேவையை உருவாக்கும் நோக்கில், அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று (05) இடம்பெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் (SASA) 41 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறியதாவது, அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பள உயர்வு திட்டமிடப்பட்டபடி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதே தொடர்ச்சியாக, 2026ஆம் ஆண்டில் வழங்கவுள்ள சம்பள உயர்வுக்காக ரூ. 11,000 கோடி நிதி ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2027ஆம் ஆண்டுக்கான அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக ரூ. 11,000 கோடி நிதி ஒதுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று (05) நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் (SASA) 41வது வருடாந்த மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

செயல்திறனும் பொறுப்புணர்வும் கொண்ட மாற்றம் ஏற்படுத்தும் அரச சேவையை உருவாக்க அரசாங்கம் முழுமையாக உறுதிப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதற்காக அரச நிர்வாக அதிகாரிகளின் முழுமையான அர்ப்பணிப்பு தேவைப்படும் என்றும், 

"அரச அதிகாரிகளின் பொறுப்புகளை சுற்றறிக்கைகள் அல்லது கட்டளைகள் மூலம் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. மக்கள் விரும்பும் நாட்டு மாதிரியை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், கடந்த காலங்களில் சிதைவடைந்த அரச முறையை மீண்டும் கட்டியெழுப்ப அரசு கட்டமைப்பே முனைந்திருக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.