ஜப்பானில் அதிகரிக்கும் சுனாமி அலைகள்! – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 


ஜப்பானில் அதிகரிக்கும் சுனாமி அலைகள்! – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


வடகிழக்கு ஜப்பானில் அமைந்துள்ள குஜி துறைமுகத்தில் சுனாமி அலைகள் 1.3 மீட்டர் உயரம் எட்டியுள்ளதைக் குறித்து, போரும் அமைதியும் தொடர்பான NHK வேர்ல்ட் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.


மேலும், நெமுரோ ஹனசாகி பகுதியில் 80 செ.மீ மற்றும் இஷினோமாகி துறைமுகத்தில் 70 செ.மீ உயரத்தில் சுனாமி அலைகள் பதிவாகியுள்ளன.


இதேவேளை, ஜப்பானின் பிற பகுதிகளிலும் சுனாமி அலைகள் 50–60 செ.மீ உயரத்தில் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  


இதற்கு முந்தைய அளவீடுகள் 20 செ.மீ மட்டுமே இருந்த நிலையில், அலைகள் சீராக அதிகரித்து வருவதால், அடுத்து வரும் 24 மணிநேரத்திற்கு சுனாமி எச்சரிக்கை நீடிக்கலாம் எனவும், அலைகள் 3 மீட்டர் வரை உயரலாம் எனவும் ஜப்பான் அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்