முதியோருக்கான ஜூலை மாத நிவாரண கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில் – நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு
முதியோருக்கான ஜூலை மாத நிவாரண கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில் – நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு
முதியோருக்கான 2025 ஜூலை மாத நிவாரண கொடுப்பனவுகள், இன்று (ஜூலை 30) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board) அறிவித்துள்ளது.
இதற்கமைய, பயனாளிகள் இன்று முதல் தங்களது வங்கிக் கணக்குகள் ஊடாக நிவாரண தொகைகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியோர் நிவாரணத் திட்டத்தின் கீழ், 600,768 பயனாளிகளுக்காக ரூ.3,004 மில்லியன் இந்த மாதத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
முதியோர் நிவாரணம் பெறும் பயனாளிகள், அஸ்வெசும வங்கிக் கணக்குகள் மூலம் இன்று (ஜூலை 30) முதல் தங்களது கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, அஸ்வெசும திட்டத்தின் முதல் கட்டத்தில், 1,424,548 பயனாளி குடும்பங்களுக்கு, மொத்தமாக ரூ.11,296,461,250 (11,296 மில்லியன் ரூபா) இந்த மாதத்திற்காக உதவித் தொகையாக ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.