இந்த ஆண்டின் இரண்டாம் தவணை இன்றுடன் நிறைவு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

2025 ஆம் கல்வியாண்டின் இரண்டாம் தவணை இன்று (07.08.2025)  நிறைவடைவதாக இலங்கையின் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இந்த மாதம் 18ஆம் திகதி (திங்கட்கிழமை) ஆரம்பமாகும் எனவும்  அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறு ஆரம்பமாகும் மூன்றாம் தவணையின் கல்வி நடவடிக்கைகள் அக்டோபர் 17ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 17ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 19ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.