யாழ் பாடசாலைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

நல்லூர் ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை (22) யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டதையடுத்து, இழந்த கல்வி நேரத்தை ஈடுசெய்யும் வகையில், எதிர்வரும் சனிக்கிழமை (31) யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகள் இயங்கும் என வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அறிவித்துள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா பாடசாலை நாளில் இடம்பெறுவதைக் கருத்தில்கொண்டு, விசேட விடுமுறை வழங்கப்பட்டதையடுத்து, அதற்கான ஈடுசெய்யும் வகையில் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அறிவித்துள்ளார்.

இந்த விடுமுறை வழங்கும் கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் நேரில் சந்தித்து முன்வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.