இன்று பொலிஸ்மா அதிபர் தெரிவு!
நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று (07) கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பேரவை இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் கூட்டம் கூடவுள்ளது.
இதேவேளை, தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரப்பூர்வ கடிதம் நேற்று (06) அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்று இந்த கடிதத்தை வழங்கியுள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை சமீபத்தில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி, இந்தத் தீர்மானம் தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர், அது நேற்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் கையொப்பமிடப்பட்டது.
இதையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மூலம் குறித்த கடிதம் தேசபந்து தென்னகோனிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
.jpeg)