எரிபொருள் விலை குறைகின்றதா? வெளியான அறிவிப்பு



எரிபொருள் லீற்றருக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.50 வரியை நீக்குவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வின் போது,  

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்,  

இந்த தகவலை அமைச்சர் தெரிவித்தார்.

அவரது விளக்கத்தில், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) பழைய கடன்கள் முழுமையாக தீர்வு செய்யப்படும் நிலையில்,  

எரிபொருள் வரி ரூ.50 நீக்கப்படும் என உறுதியளித்தார்.  

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) திறைசேரிக்கு மொத்தமாக ரூ.884 பில்லியன் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

அந்த தொகையின் பாதி ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள தொகையும் முழுமையாக செலுத்தப்பட்டவுடன்,  

எரிபொருளுக்கான லீற்றருக்கு விதிக்கப்பட்ட ரூ.50 வரியை நீக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்யும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக வருங்கால நிதி திட்டங்களில் மாற்றம் ஏற்படும் என்றும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.