தனியார் ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
தனியார் ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.30,000 ஆக அடுத்த வருடம் ஜனவரி 1 முதல் அதிகரிக்கப்படும் என தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
இதுவரை 17,500 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச அடிப்படை சம்பளம், 2024 ஏப்ரல் மாதம் முதல் ரூ.27,000 ஆக உயர்த்தப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக மேலும் ரூ.3,000 உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பு, நேற்று (22) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோ,
“2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு முன்னரே செய்யப்பட்டுள்ளது. அதே போல், தனியார் துறையினரின் அடிப்படை சம்பளத்தை ரூ.30,000 வரை உயர்த்தும் நோக்கில் நாங்கள் கலந்துரையாடல் நடத்தினோம்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 27,000 ரூபாயை குறைந்தபட்ச சம்பளமாக ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு கொண்டு வரவும்,
2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் அதை ரூ.30,000 ஆக உயர்த்தவும் இணக்கம் ஏற்படுத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரூ.30,000 சம்பளம் தற்போதைய பணவீக்க சூழ்நிலைக்கு போதுமானதல்ல என்றும்,
சாதாரண வாழ்க்கை செலவுக்கே ஒரு இலட்ச ரூபாயிற்கு மேற்பட்ட வருமானம் தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நாட்டின் பொருளாதாரத்தை நிலைநாட்டி, உற்பத்தி வளர்ச்சியை விருத்தி செய்யும் வகையில்தான்
இத்தகைய உயர்வுகளை நடைமுறையில் கொண்டுவர முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.