அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான மகிழ்ச்சி செய்தி!

 


அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான மகிழ்ச்சி செய்தி!

அஸ்வெசும திட்டத்தின் கீழ், முதல் கட்ட நிவாரணத்திற்குத் தகுதி பெற்ற பயனாளிகளுக்கான ஜூலை மாத உதவித்தொகை, நாளை (ஜூலை 24) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இந்நிவாரணம் தொடர்பான அறிவிப்பு இன்று (ஜூலை 23, 2025) வெளியிடப்பட்டுள்ளது.

தகுதி பெற்ற பயனாளிகள், தங்கள் வங்கி கணக்குகள் மூலம் உதவித் தொகையை நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.

இதற்கமைய, 1,424,548 பயனாளி குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.11,296,461,250 (11,296 மில்லியன் ரூபாய்)  

உதவித் தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 24 ஆம் தேதி முதல், பயனாளிகள் தங்கள் வங்கிக் கணக்குகளிலிருந்து இந்த தொகையை பெற முடியும்.