பால்மா விலை அதிகரிப்பை தொடர்ந்து பால் தேநீரின் விலை அதிகரிப்பு!
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து, பால் தேநீரின் விலை 10 ரூபாவால் உயர்த்தப்படும் என அகில இலங்கை உணவகங்கள் மற்றும் விடுதிகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, சங்கத்தின் தலைவர் ருக்ஷான் ஹர்ஷன் தெரிவித்ததாவது, இறக்குமதியாளர்கள் 400 கிராம் பால்மா பொதியொன்றின் விலையை 100 ரூபாவாலும், ஒரு கிலோ பொதியின் விலையை 250 ரூபாவாலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளதால், உணவகங்களும் தங்களின் விலைகளை சமநிலைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
இதன்படி, நாடளாவியமட்டும் உணவகங்களில் பால் தேநீரின் விலை விரைவில் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை