போதைப்பொருள் பிடியில் பல்கலைக்கழக மாணவர்கள் - அதிர்ச்சியில் கம்பஹா
கம்பஹா, திவுலப்பிட்டிய பிரதேசத்தில் 'ஐஸ்' போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் இருவரும் பிடிபட்டுள்ளனர்.
ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றல்
இவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயர்கல்வி கற்கும் இளைஞர்கள் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்டுள்ளமை அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார், இவர்களுக்குப் பின்னால் உள்ள போதைப்பொருள் விநியோக வலையமைப்பு குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
