பரசன்கஸ்வெவவில் கொடூரம்: மனைவியை தீயிட்டு கொன்ற கணவன்!


பரசன்கஸ்வெவ: அனுராதபுரம், பரசன்கஸ்வெவ - மெதகம பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கணவனே தீவைத்து எரித்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் பதிவாகியுள்ளது.

சம்பவம் குறித்த விபரம்:
நேற்று (13) இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கணவன் மனைவி மீது தீ வைத்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தலைமறைவான சந்தேகநபர்:
இக்கொலைச் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபரான கணவன் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். அவரை கைது செய்வதற்காக பரசன்கஸ்வெவ காவல்துறையினர் விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பரசன்கஸ்வெவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.