யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளி மரணம்: சிகிச்சையில் தவறு நடந்ததாக மகன் முறைப்பாடு

காதுக்குத்து சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இது வைத்தியர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட மரணம் எனக் கூறி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் சுன்னாகம், சூராவத்தை பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய வீரசிங்கம் அம்பிகைபாகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் தெரியவருவதாவது, கடந்த 23ஆம் திகதி காதுக்குத்து காரணமாக அவர் யாழ். போதனா வைத்தியசாலையின் கண், காது, தொண்டை (ENT) சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் 41ஆம் விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (06) அவர் உயிரிழந்துள்ளார்.

தனது தந்தையின் மரணம் வைத்தியர்களின் தவறினால் ஏற்பட்டதாகக் கூறி, உயிரிழந்தவரின் மகன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் உத்தியோகபூர்வ முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி அன்ரலா வின்சன்தயான் மேற்கொண்டு வருகின்றார்.