ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சை வர்த்தமானியில் அநீதி என சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
தற்போதைய அரசாங்கம் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக வர்த்தமானி அறிவிப்புகளை வெளியிடும் நிலையிலும் தோல்வியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில், 2025 ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களே தகுதி பெறுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளமை குறித்து அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த முடிவினால், அதன் பின்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்த பல இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு கடுமையான அநீதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆசிரியர் சேவை வர்த்தமானியில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக இன்று வெளியிட்ட விசேட அறிவிப்பில் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், 2025 டிசம்பர் மாதம் வரை பட்டப்படிப்பை முடித்த அனைவரும் ஆசிரியர் சேவைக்கான பரீட்சையில் பங்கேற்கக்கூடிய வகையில், சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு திருத்தப்பட வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
