தொழில்நுட்பக் கோளாறு: கடவுச்சீட்டுகள் மற்றும் விசாக்கள் வழங்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

 

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கடவுச்சீட்டுகள் மற்றும் விசாக்கள் வழங்கும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

அமைப்பு முறையாக செயல்பட தொடங்கியவுடன், கடவுச்சீட்டுகள் மற்றும் விசாக்கள் வழங்கும் பணிகள் மீண்டும் உடனடியாக தொடங்கும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறை சரி செய்வதற்காக அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு, பொதுமக்கள் 011 210 1540 அல்லது 011 210 1545 என்ற தொலைபேசி எண்களில் திணைக்களத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிடலாம் எனக் கூறப்பட்டுள்ளது.