தங்கத்தின் விலையில் திடீர் உயர்வு – உள்நாட்டு சந்தையிலும் மாற்றம்
உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை காண்பித்து வருகிறது. அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் தற்போது 5,106 அமெரிக்க டொலர் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முன் நேற்று (20) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,010 டொலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, உலக சந்தையில் வெள்ளியின் விலையும் உயர்வு பெற்றுள்ள நிலையில், ஒரு அவுன்ஸ் வெள்ளி 84.59 டொலராக பதிவாகியுள்ளது.
இந்த உலக சந்தை மாற்றங்களின் தாக்கமாக, உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தைத் தரவுகளின்படி, நாட்டில் தங்கத்தின் விலையில் சுமார் 4,000 ரூபா வரை உயர்வு பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில், இன்று (21) முற்பகல் கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 366,300 ரூபாவாக உயர்ந்துள்ளது. நேற்று (20) அது 362,600 ரூபாவாக காணப்பட்டது.
மேலும், கடந்த வெள்ளிக்கிழமை 392,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை, இன்று 396,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
