மீனவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
இலங்கையின் வடகிழக்கில் உள்ள மத்திய வங்கக் கடல் பகுதியில் பயணிக்கும் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (பெப்ரவரி 24) பிற்பகல் 2.00 மணியளவில் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பில் இதற்கான தகவலை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு வடகிழக்கே நிலவிய குறைந்த அழுத்த மண்டலம் கிழக்கு நோக்கி நகரும் போதிலும், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் அதன் வலிமை குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கத்தால், வரைபடத்தில் அடையாளப்படுத்தப்பட்ட கடல் பகுதிகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், மணிக்கு 50–60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
மேலும் கடல் நிலை கொந்தளித்திருக்கும் என்பதால், கடல்சார் சமூகத்தினர், மீனவர்கள் மற்றும் பயணிகள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
