முட்டை மற்றும் கோழி இறைச்சி விலை திடீர் உயர்வு
நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர். பொதுச் சந்தைகளில் ஒரு முட்டை தற்போது 35 ரூபாவை விட அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒரு முட்டையின் விலை 55 முதல் 60 ரூபா வரை உயர்ந்துள்ளதாகக் காணப்படுகிறது. மேலும், சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சி சுமார் 1300 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
விநியோகஸ்தர்கள் விலைகளை உயர்த்தியுள்ளதன் காரணமாக, தங்களும் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், தற்போது சந்தைக்கு வரும் கோழி இறைச்சி மற்றும் முட்டை விநியோகத்தில் ஓரளவு குறைபாடு நிலவுவதாகவும் வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Tags:
இலங்கை
