இலங்கையில் இன்று தங்க விலை நிலவரம்

 

உலக சந்தை நிலவரத்தின் பின்னணியில், உள்நாட்டு சந்தையில் இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 392,000 ரூபாய்க்கும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 362,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் அடிப்படையில், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,325 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.