குறைந்த எரிபொருள் விலை: பேருந்து கட்டண நிலவரம் குறித்து முக்கிய தகவல்
எரிபொருள் விலையில் ஓரளவு குறைவு ஏற்பட்டிருந்தாலும், வருங்காலத்தில் பேருந்து கட்டணங்களை உயர்த்த வேண்டிய சூழ்நிலை உருவாகும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
அவரது கருத்துப்படி, எதிர்வரும் ஜூலை மாதத்திற்கு முன் பேருந்து கட்டணத்தில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக, கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பேருந்து சேவைகளை நடத்துவது தற்போது கடினமாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னைய தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின் படி, அந்தப் பகுதிகளில் ஒரு லீட்டர் டீசலில் 2 முதல் 3 கிலோமீட்டர் வரை பயணிக்க முடிந்ததாக தெரிவித்தார். ஆனால் தற்போது, ஒரு லீட்டர் டீசலில் 2 கிலோமீட்டருக்கும் குறைவான தூரமே செல்ல முடியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பேருந்து கட்டணத்தை உயர்த்துவது தவிர்க்க முடியாததாக இருப்பதாகவும், குறைந்தபட்ச கட்டணத்தை 5 முதல் 6 ரூபாய் வரை அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
.png)