தங்கம் விலையில் அதிரடிப் பாய்ச்சல்! அவுன்ஸ் 5158 டொலராக உயர்வு; இலங்கையில் பவுண் 4 இலட்சத்தைத் தொட்டது
உலக சந்தையில் இன்றைய தினம் (26.02.2026) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,158 அமெரிக்க டொலர்களாக நிலவுகிறது.
சமீப காலமாக தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான ஏற்றத் தாழ்வுகள் பதிவாகி வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலக சந்தை வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலை 5,000 அமெரிக்க டொலர் அளவைக் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆறு மாதங்களில் கணிசமான உயர்வு
அதேவேளை, கடந்த ஆறு மாத காலப்பகுதியில் தங்கத்தின் விலை 52.44 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனுடன், வெள்ளியின் விலையும் அதிகரித்து தற்போது ஒரு அவுன்ஸ் 88 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையில், கொழும்பு செட்டியார் தெரு வணிக வட்டாரங்களின் தகவலின்படி, இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை சுமார் 370,000 ரூபாவாக காணப்படுகின்றது. அதேபோல், 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 400,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
