"திருடர்களைப் பிடித்துக் கொடுத்தால் 25 ஆயிரம்!" – மட்டக்களப்பு பண்ணையாளர்கள் அதிரடி அறிவிப்பு
மட்டக்களப்பு திராய்மடு மற்றும் பாலைமீன்மடு பகுதிகளில் கால்நடை வளர்ப்பா ளர்களின் மாட்டுபட்டிகளில் உள்ள 40 மாடுகளை இதுவரை திருடர்கள் திருடிச் சென்று இறைச்சியாக்கியுள்ளனர் எனவே இத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடித்து தருபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சன்மானமாக வழங்கப்படும் என பொதுமக்களிடம் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பில் நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கால்நடைவளர்ப்பு பண்ணையாளரும், வர்த்தகரும் ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட 15 பேருக்கு மேற்பட்ட கால் நடை வளர்ப்பாளர் மாடு மற்றும் ஆடுகளை ஜீவனோபாய தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த பகுதிகளில் நள்ளிரவில் திருடர்கள் மாடுகள் ஆடுகளை திருடிச் சென்று ஏறாவூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று அதனை வெட்டி இறைச்சியாக்கி வருகின்றனர்.
இவ்வாறு மாடுகள் திருடப்படுவதால் கால்நடைவளர்ப்பு மேற்கொள்ளமுடியாது நிலை ஏற்பட்டுள்ளது எனவே இந்த மாடுகளை திருட்டில் ஈடுபடுவர்களை கண்டால் அவர்களை பிடித்து தருபவர்களுக்கு சன்மானமாக 25 ஆயிரம் ரூபா பணம் வழங்கப்படும் என பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் அறிவித்தனர்.
