ஆபத்தான நிலையில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள்: தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!


 அதிக ஆபத்துள்ள பகுதிகளில் அமைந்துள்ள 12,301 வீடுகள் மக்கள் வசிப்பதற்குப் பொருத்தமானதல்ல என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் அமைந்துள்ள குறித்த 12,301 வீடுகளும் மக்கள் வாழ்வதற்கு பொருத்தமற்றது என்பதால் அங்குள்ள மக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அவர்களுக்கான மாற்று இடங்களை காண்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.