தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது நேர்ந்த விபரீதம்: கிளிநொச்சியில் 82 வயது முதியவர் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகர் பகுதியில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ‘யாழ். ராணி’ ரயிலுடன், துவிச்சக்கர வண்டியில் கடவையை கடக்க முற்பட்ட முதியவர் மோதுண்டதில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இவ்விபத்தில் கிளிநொச்சி, ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய முதியவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்