அரச வேலை வாய்ப்பு: சம்பள அதிகரிப்பு: ஓய்வு கொடுப்பனவு - வெளியான மகிழ்ச்சி தகவல்
அரசாங்கத்தால் 75,000 அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது என, பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்துள்ள பிரதிசபாநாயகர் ரிஸ்வி சாலி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இரண்டாவது வாசிப்பு விவாதத்தின் போது, இவ்வாறு கருத்து தெரிவித்த அவர், இத்தகைய வேலைவாய்ப்புகள் பலர் எதிர்நோக்கிய ஒரு முக்கிய எதிர்பார்ப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, அரச சேவையின் வலிமை மற்றும் கண்ணியத்தை பேணும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் பணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகள் தொடர்பாகும், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், அரசாங்கம் 75,000 புதிய அரசாங்க வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டத்தைக் கொண்டுள்ளது எனவும் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தெரிவித்துள்ளார்.
