வானிலை குறித்து இன்றிரவு வரை பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகமாக உள்ளதையடுத்து, வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

இந்த எச்சரிக்கை இன்று (15) இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தென் மற்றும் ஊவா மாகாணங்கள், களுத்துறை, இரத்தினபுரி, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையுடனான பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் அதிக வாய்ப்பு உள்ளதாகவும், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வானிலை நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில், தொடர்புடைய பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.  

மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய அபாயங்களை தவிர்க்க, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வானிலை நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.