மட்டக்களப்பில் வீசிய மினி சூறாவளி! வேரோடு சாய்ந்த மரங்கள்; வீடுகளுக்கு சேதம்!

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் இன்று (24) ஏற்பட்ட மினி சூறாவளியால் பல மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், வீடுகள் பலவும் கடுமையாக சேதமடைந்துள்ளன.  

இதன் விளைவாக, பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பருவ மழை ஆரம்பமாகியுள்ள இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட மினி சூறாவளியால் தற்பொழுது மழையுடனான கடும் வானிலை நிலவி வருகின்றது.

அதேவேளை, பலத்த மழை மற்றும் கடும் காற்று தொடர்பாக, நாடு முழுவதும் செல்லுபடியாகும் வகையில் 24 மணி நேர எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.