நாட்டில் பல தடவைகள் மழை பெய்யும் வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுடன் கூட்டு, காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (15) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல பகுதிகளில் இன்று பி.ப. 1:00 மணி க்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது திடீர் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் சேதங்களை குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.