இலங்கையில் எகிறும் தங்கத்தின் விலை!
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்த தங்க விலை, இன்று (15.09.2025) மீண்டும் உயர்வாக பதிவாகியுள்ளது.
இன்றைய நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ.1,101,491 ஆக பதிவாகியுள்ளது. அத்துடன், இன்றைய (15.09.2025) நிலவரத்தின் படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.38,860 ஆகவும், ஒரு பவுன் (8 கிராம்) விலை ரூ.310,850 ஆகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.35,630 ஆகவும், ஒரு பவுன் (8 கிராம்) விலை ரூ.285,000 ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.34,010 ஆகவும், 21 கரட் தங்கப் பவுன் விலை இன்றையதினம் ரூ.272,050 ஆகவும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
