எதிர்வரும் ஆண்டுக்கான பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்

அடுத்த ஆண்டு முதல், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தாமதமின்றி உரிய நேரத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ளதுடன், உயர்தரப் பரீட்சை டிசம்பர் மாதத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, 2026ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதனையடுத்து, பரீட்சைக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் பாடசாலை விடுமுறைகள் உரிய காலப்பகுதியில் வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.