இலங்கை மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையில் மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கை–அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகளில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு வரிவிலக்கு வழங்கும் முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இந்த முன்மொழிவுக்கு பின்னால் உள்ள காரணமாக, இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக சமநிலையில் இலங்கைக்கு சாதகமான நிலைமை இருப்பது குறிப்பிடப்படுகிறது.

முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்பட்டால், டெஸ்லா போன்ற உயர் தர மின்சார வாகனங்கள் மட்டுமின்றி Ford, Chevrolet, Jeep போன்ற பிரபலமான அமெரிக்க வாகனங்களும் வரிவிலக்கு ஆட்சி கீழ் இலங்கை சந்தைக்கு நுழைய வாய்ப்பு உருவாகும்.  

இது, இலங்கை வாகன சந்தையில் போட்டியை அதிகரிப்பதோடு, உயர் தொழில்நுட்பமிக்க மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனங்களின் கிடைப்பையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயர்தர தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய அமெரிக்க வாகனங்கள், அதிக வரிவிதிப்பு காரணமாக இதுவரை இலங்கை சந்தையில் குறைந்த அளவிலேயே காணப்பட்டன. ஆனால், வரி சலுகை வழங்கப்பட்டால், இவ்வாகனங்களை மக்கள் நியாயமான விலையில் பெறும் வாய்ப்பு உருவாகும்.

இந்நிலையில், இலங்கை அரசு இதற்கான இறுதி ஒப்புதலை இதுவரை வழங்காத நிலையில், அரசியல் வட்டாரங்கள் இந்த முன்மொழிவை படிப்படியாக பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளன.

மேலும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த 44% வரி இரு கட்டங்களாக 20% ஆக குறைக்கப்பட்டிருந்தாலும், அதன் மாற்றாக இலங்கைக்கு உண்மையில் பயனளிக்கும் வகையிலான ஒப்பந்தங்கள் உள்ளனவா என்பதைக் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன.