நீரில் மூழ்கிய காதலனை காப்பாற்ற முயன்ற காதலி பரிதாபமாக உயிரிழப்பு

 


நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவியின் உடல் கண்டெடுப்பு

மஹியங்கனைப் பகுதியில் துயரமான நிகழ்வாக, 17வது தூண் பகுதியில் உள்ள வியானா கால்வாயில், தனது காதலனைக் காப்பாற்ற முற்பட்ட போது நீரில் மூழ்கி காணாமல் போன இளம் பெண்ணின் உடல் இன்று (21) காலை மீட்கப்பட்டுள்ளது.

இந்த துயர சம்பவம் நேற்று (20) மாலை 5 மணியளவில் நடந்துள்ளது.  

பலத்த நீரோட்டம் நிலவிய கால்வாயில், நெருங்கிய வழியில் நடந்து சென்ற இருவரில் இளைஞர் வழுக்கி நீரில் விழ,  

அவரைக் காப்பாற்ற முயன்ற பெண்ணும் நீரில் விழுந்துள்ளார்.

சம்பவத்தைப் பார்த்த மஹியங்கனை பொலிஸ் பயிற்சிப் பாடசாலை அதிகாரி மற்றும் அவரது மனைவி உடனடியாக குதித்து, இளைஞனைக் காப்பாற்றியதாக கூறப்படுகிறது.  

இளம்பெண்ணை அவர்கள் காப்பாற்ற முடியவில்லை.

பொலிஸாரும், உள்ளூர் மக்கள் குழுவும் இணைந்து முயற்சி மேற்கொண்டதின் பின்னர்,  

இன்று காலை அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

உயிரிழந்தவர் ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த 26 வயதுடைய ரஜரட்ட பல்கலைக்கழக மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மஹியங்கனை பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகின்றன.