அடுத்த 24 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.
அடுத்த 24 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.
நாட்டில் கடும் சீரற்ற காலநிலை: 24 மணி நேரம் கடல் பகுதிகளுக்குள் செல்ல தடை - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
கடற்படை மற்றும் மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது என்று தெரிவிக்கப்படுள்ளது
வானிலை ஆய்வுத் துறையின் புதிய அறிக்கைப்படி, நாட்டின் பல கடற்கரைப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் கடும் காற்று மற்றும் அலைகள் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், கடல் பகுதிகளுக்குள் செல்வது அபாயகரமானதாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கைக்கு உட்பட்ட முக்கிய பகுதிகள்
சிலாபம் முதல் புத்தளம் வழியாக மன்னார் வரை
காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரை
இப்பகுதிகளில் கடல்
கொந்தளிப்பானது முதல் மிகவும் கொந்தளிப்பான நிலை
வரை இருக்கும். மேலும், அலைகளின் உயரம் 2.5–3.0 மீட்டர் வரை உயர்ந்து, கடற்கரையில் அலைகள் எழும்பக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் அதிகரிப்பு
மணிக்கு 60–70 கி.மீ
(சிலாபம் முதல் மன்னார் & காலி முதல் பொத்துவில் வரை)
மணிக்கு 50–60 கி.மீ
(மன்னா முதல் காலி & காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரை)
மேலே கூறிய வாறு காற்றின் வேகம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மழை பெய்யும் பகுதிகள்
புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் இன்று பல இடங்களில் மழை பெய்யும்.
அறிவுறுத்தல்
மீனவர்கள் மற்றும் கடல் பயணிகள் உடனடியாக கடல் பகுதிகளுக்குள் செல்லாமல் இருக்க வேண்டும்.
கப்பல் மற்றும் படகு சேவைகள் கவனமாக இயக்கப்பட வேண்டும்
வானிலை மேலும் மோசமடையும் சூழ்நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைபிடிக்குமாறு அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.