தமிழர் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு; சம்பவம் குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரிப்பு

வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஈரற்பெரியகுளம் மயானப் பகுதியில், நேற்று காலை ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மயான வளாகத்தில் உடலம் காணப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அதன்போது, சுமார் 40 முதல் 45 வயதுக்கிடையில் உள்ளதாக மதிக்கப்படும் ஆண் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த உடலின் சில பகுதிகள் தீயால் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதுவரை உயிரிழந்தவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் மரணத்திற்கான காரணம் மற்றும் அதற்குப் பின்னணி குறித்து, ஈரற்பெரியகுளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.