கட்டுநாயக்கவில் அதிநவீன மாற்றம்: இன்று முதல் இலத்திரனியல் நுழைவாயில்கள் திறப்பு!
கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இன்று (28) முதல் இலத்திரனியல் நுழைவாயில்கள் (Electronic Gates / E-Gates) உத்தியோகபூர்வமாக செயல்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்காக, நான்கு இலத்திரனியல் நுழைவாயில்கள் திறக்கப்படவுள்ளதாக பிரதம குடிவரவு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்த மாற்றம் விமான நிலைய வருகை முனையத்தில் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும். ஜப்பானிய அரசின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட இந்த 'ஈ-கேட்' திட்டம் மூலம் பயணிகள் சேவை வேகமாகும், விமான நிலையத்தின் செயல்திறன் மேம்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:
இலங்கை
.png)