இலங்கையில் மேலும் அதிகரித்த தங்கவிலை!
கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்றைய தினம் (10), நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது, தங்கத்தின் விலையில் சற்று குறைவு காணப்பட்டுள்ளது.
தங்க விலை நிலவரத்தின் அடிப்படையில், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ.1,208,731 ஆக பதிவாகியுள்ளது.
தற்போதைய தங்க விலை நிலவரத்தின் அடிப்படையில்,
- 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை ரூ.42,640
- 24 கரட் தங்கப் பவுண் (8 கிராம்) விலை ரூ.341,100
- 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை ரூ.39,090
- 22 கரட் தங்கப் பவுண் விலை ரூ.312,700
- 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை ரூ.37,310
- 21 கரட் தங்கப் பவுண் விலை ரூ.298,500 என பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு செட்டியார் தெருவில் பதிவான தங்க விலை நிலவரங்களின் அடிப்படையில்,
- 24 கரட் தங்கப் பவுண் (8 கிராம்) விலை ரூ.330,000
- 22 கரட் தங்கப் பவுண் (8 கிராம்) விலை ரூ.305,300
என பதிவாகியுள்ளது.
எனினும், தங்க ஆபரணங்களின் விலைகள் மேலே குறிப்பிடப்பட்ட விலைகளிலிருந்து வரிசையாக மாறுபடக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.