வேலைவாய்ப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்!
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட 50,000 இளையோருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் புதிய செயல் திட்டம் இன்று (14.07.2025) செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான நேர்முகத் தேர்வுகள் ஜூலை 23 ஆம் திகதி வரை, நாடளாவிய அளவில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் இளையோர், சமுர்த்தி துறையால் நிதியளிக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் தொழில்வியல் கல்வி பாடநெறிகளை பயில, ரூ.50,000 மதிப்புள்ள முழுமையான உதவித்தொகையைப் பெறுவர்.
மேலும், தொழில் முனைவில் ஆர்வமுள்ளவர்களுக்கு வணிகப் பயிற்சிகளும், சொந்தமாக தொழில் தொடங்குவதற்கான சலுகைக் கடன்களும் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் இணைய விரும்பும் இளைஞர்கள் https://www.nextsrilanka.lk என்ற இணையதளத்துக்குச் செல்லலாம்.
இத்திட்டம், கிராம மேம்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது.
அடுத்த 5 ஆண்டுகளில் 20 இலட்சம் குடும்பங்களை அடையும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.